எண்ணக்கரு உருவாக்கம்
பல தொடர்பான எண்ணக்கருக்களை பொதுமையாக்கம் செய்தலே சிந்தனைசார் தொழிற்பாடாகும் . இக்கருத்துப் பற்றிய உமது விளக்கத்தை முன்வைக்குக . “ எண்ணக்கரு என்பது யாதேனும் பொருள் தொகுதியில் ஏற்படத்தக்க முக்கியமல்லாதவையான மாற்றங்களை மறந்து அவற்றுக்கு இடையிலான பிரதானமான இயல்புகளை மாத்திரம் கவனத்திற் கொண்டு அவற்றை ஒரு தொகுதியாகக் கொண்டு , அவற்றை ஒரு பொதுப்பெயரினால் அழைப்பதாகும் ”. எனவே சகல ஆசிரியர்களையும் ஒன்று திரட்டி “ ஆசிரியர் ” எனும் எண்ணக்கருவும் , சகல மரங்களையும் ஒன்று திரட்டி “ மரம் ” எனும் எண்ணக்கருவும் முன்வைக்கப்பட்டுள்ளன . ஓத்த இயல்புகளைக் கொண்ட பொருள்களை ஒன்று திரட்டி அவற்றுக்கு ஒரு பொதுப்பெயரை வழற்குவதால் அது ஒரு எண்ணக்கரு எனக் குறிப்பிடப்படுகிறது . அதாவது சமமான பண்புகளைக் கொண்ட தூண்டிக்கான பலவற்றைத் திரட்டுவதால் தோன்றுவதே ஒரு எண்ணக்கரு எனப்படுகின்றது . எண்ணக்கரு என்பது பொதுவான தன்மைகளைக் கொண்ட தூண்டிகளின் ஒழுங்கான ஓர் அமைப்பு என்று கூறுவர் . இங்கு தூண்டி என்பது எமது ஐம்புலன்களுக்கு எட்டுகின்ற பொரு...