தரவுகளை கையாள்வதில் பாரம்பரிய முறைக்கும் நவீன முறைகளுக்கும் இடையிலான தொடர்புகள் மற்றும் பிரச்சனைகள் பற்றி உதாரணம் மூலம் ஆராய்க.
உலகில் நாகரீகங்கள் தோன்றிய காலத்தில் இருந்தே தரவுகளின் தேவை உணரப்பட்டது. ஆதிகால மனிதன் தொடக்கம் தற்கால மனிதன் வரைக்கும் தரவுகள் அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. ஆரம்பகால மனிதன் தனக்கு கிடைத்த பொருட்களில் தனக்கு தேவையான விடயங்களைக் குறிப்பிட்டு வைத்தான். அப் பொருட்களாக எழும்புகள், களிமண் தட்டுக்கள், ஓலை ஈச்சை மட்டைகள் என்பனவாகும். மொசபத்தேமிய களிமண் தட்டினை உதாரணமாக குறிப்பிட முடியும். இவ்வாறு பெறப்பட்ட தரவுகளைக் கொண்டே அவ் மக்கள் தங்களது வாழ்வொழுங்கை அமைத்தனர். பயணங்களின் போது வாணசாஷ்த்திர குறிப்புகளை பயன்படுத்தியமை தரவுப் பயன்பாட்டின் உச்ச கட்டத்தினை அவதானிக்கலாம். இவ் பரினாம வளர்ச்சியின் மைக்கல்லாக நவீன தரவு கையாளுகையான இலத்திரனியல் தரவுக் கட்டமைப்பைக் குறிப்பிடலாம். இணையத்தளத்தின் வருகையை தொடர்ந்து இதன் செல்வாக்கு அதிகமாக உள்ளது. புதிய, இலகுவான தரவுக்கையாளுகைகள் எமக்கு கிடைக்கக்கூடியதாக காணப்படுகின்றது. அந்த வகையில் தரவு என்பது, குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பான அறிவினை விருத்தி செய்யக்கூடிய அனைத்து விபரங்களும் தரவுகள் எனப்படுகின்றது. இத்தரவானது பரிசோதனை ( Experiment ) மூலமான வெள...