Posts

Showing posts from August, 2021

பிள்ளையின் கற்கை முறைகள் (Methods Of Child Study)

Image
  இன்றைய நவீன கல்விச்சிந்தனை போக்குகளில் சிறப்பான கல்வியை வழங்குவதற்கு கற்றல் கற்பித்தலுடன் தொடர்பான முக்கிய விடயங்களை சரியாக இனங்காண்பது அவசியமாகும் . இதனடிப்படையில் இன்று கல்விச்செயற்பாடுகளில் பிள்ளைகளை முழுமையாக விளங்கிக்கொள்வது இன்றியமையாததாகும் . ஆசிரியரின் செயற்பாடுகள் வெற்றிகரமாக அமைவதற்கும் பிள்ளைகளை விளங்கிக்கொள்வதற்கும் பிள்ளை ஆய்வு முறைகள் பற்றிய விளக்கம் பிரதானமாதாகும் . பிள்ளைகளை விளங்குவது என்பது பிள்ளையின் அறிவுமட்டம் மனப்பாங்குகளின் தன்மை , திறன்களின் வெளிப்பாடுகள் , குடும்பப்பின்னணி , சுகாதார நிலை , ஆளுமைக்கோலம் , நுண்ணறிவுமட்டம் ,  ஆன்மீக ஈடுபாடு , ஒழுக்கப்பண்பாடுகள் , தனியாள் வேறுபாடுகள் , விசேட தேவைகள் , குறைபாடுகள் போன்ற அனைத்தையும் விளங்கிக்கொள்வது இன்றியமையாததாகும் . முதலில் ஒவ்வொரு ஆசிரியரும் தன்னை முழுமையாக அறிந்துகொள்ளல் வேண்டும் . தன்னுடைய கல்வி அறிவு , திறன்கள் , பழக்கவழக்கங்கள் , தொடர்பாடல் , உளவியல் அறிவு , போதனா அறிவு , பிள்ளைகளை புரிந்துகொள்ளும் ஆற்றல் என்பவற்றில் தெளிவு ஏற்படவேண்டும் . இரண்டாவ